புதிய வசதியை அறிமுகம் செய்த டுவிட்டர்!!

509

பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்ட டுவிட்டர் புதிய வசதி ஒன்றினை நேற்றைய தினம் அறிமுகம் செய்துள்ளது.

புக்மார்க் எனும் இவ் வசதியின் ஊடாக பயனர்கள் ஒரு டுவீட்டினை மீண்டும் இலகுவாகவும், விரைவாகவும் பார்க்கக்கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

அதாவது மற்றவர்களின் டுவீட்களை புக்மார்க் வசதியின் ஊடாக சேமித்து வைக்க முடியும். பின்னர் விரும்பிய நேரத்தில் திரும்பவும் பார்க்க முடியும்.

இதற்கான வசதியை லைக் அல்லது அன்லைக் செய்யும் பொத்தானுக்கு அருகில் தரப்பட்டுள்ள பொத்தானில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

அனைத்து பயனர்களாலும் பெற்றுக்கொள்ளக்கூடிய இவ் வசதியினை iOS, Android சாதனங்களிலும், Twitter Lite அப்பிளிக்கேஷன் மற்றும் இணையத்தளங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.