நாய்க்குட்டி ஒன்றிற்காக பாதி வழியில் விமானத்தை திருப்பிய விமானிகள்!!

316

அமெரிக்காவில் விமானம் மாறி ஏறிய நாய்க்குட்டியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க, விமானிகள் பாதி வழியில் விமானத்தை திருப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஜெர்சியில் இருந்து ஒஹாயோ செல்ல வேண்டிய விமானத்தில் நாய்க்குட்டி ஒன்று பயணிக்க இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் செயிண்ட் லூயிஸ் செல்லும் விமானத்தில் தவறுதலாக ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விமானம் பாதி தூரம் பயணித்த போது இந்த விடயம் விமான நிறுவனத்திற்கு தெரிய வந்தது. அதன் பின்னர், ஒஹாயோவிற்கு விமானத்தை திருப்புமாறு யுனைடெட் நிறுவனம் ஆணையிட்டது.

அதன்படி விமானிகள், பயணிகளின் எதிர்ப்பையும் மீறி விமானத்தை திருப்பியுள்ளனர். 6 மணி நேரத்திற்கு பின்னர் அந்த நாய்க்குட்டி, அதன் உரிமையாளரிடம் சேர்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகள் அனைவரும் வேறு விமானத்தின் மூலம், செயிண்ட் லூயிஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், யுனைடெட் விமானத்தில் நாய் ஒன்று மரணம் அடைந்தது. அதே வாரம், மற்றொரு நாய் வேறு விமானத்தில் தவறுதலாக மாற்றி ஏற்றப்பட்டது.

இந்த இரண்டு பிரச்சனைகளும் பெரிதானதைத் தொடர்ந்தே, தற்போது நாய் ஒன்றிற்காக விமானம் திருப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.