1000 ரூபாய் இன்று 5.7 லட்சம் கோடியாக மாறியது எப்படி : முகேஷ் அம்பானியின் வெற்றிக்கதை!!

771


இந்திய வர்த்தகத்தில் உலக ஜாம்பவான் எனப் போற்றப்படும் முகேஷ் அம்பானி தன்னுடைய கம்பனி முதன் முதலில் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதை கூறியுள்ளார்.



முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையுடன் வணிகத்தில் ஈடுபட்ட அவர், மிக விரைவில் ஒரு தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்றார்.

இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் எனப் போற்றப்படும் திருபாய் அம்பானியின் மகன் ஆவார். ரிலையன்ஸ் என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதில் முகேஷின் பங்களிப்பு முக்கியமானது என்று கூறினால் மிகையாது.



இப்படி வர்த்தக உலகில் கொடிகட்டி பறக்கும் முகேஷ் அம்பானி சமீபத்தில் Financial Times ArcelorMittal Boldness in Business Awards என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், இந்த நிறுவனம் கடந்த 1966-ஆம் ஆண்டு என்னுடைய தந்தையான Dhirubhai Ambani-யால் 1,000 ரூபாயை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரே ஒரு தொழிலாளி மட்டும் தான் வேலை பார்த்தார்.
அதன் பின் 5 தசாப்தங்கள் அதாவது 50 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிறுவனத்தின் நிகர மதிப்பு 5.7 லட்சம் கோடியாக உள்ளது.


எங்கள் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் பங்குதாரர்கள் என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 40 ஆண்டுகளில் எங்களிடம் பங்குதாரர்களாக உள்ளவர்கள் மதிப்பு, தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


அதுமட்டுமின்றி எந்தவொரு வணிகக் குழுவை விடவும், எங்கள் நிறுவனம் இந்தியாவிற்கு பெருமளவு உதவி செய்திருக்கிறது அதுவும் ஒரு வகை காரணம் என்றே கூறலாம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2017-ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களின் மதிப்பு 6 லட்சம் கோடியாக உயர்ந்து புதிய மைல் கல்லை எட்டியது .

தற்போது உள்ள வர்த்தக உலகத்தில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர மதிப்பு 5.7 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு அடுத்த படியாக TCS 5.4 லட்சம் கோடியோடு உள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிமாகிவிட்டது. முதலில் இலவசமாக இதை கொடுத்த அம்பானி, அதன் பின் கணிசமாக ஒரு விலைகளை நிர்ணயித்து கொடுத்து வருகிறார்.


இந்த எண்ணம் எதனால் எனக்கு ஏற்பட்டது என்பதை குறித்தும் கூறியுள்ளார். அதாவது அமெரிக்காவில் Yale University படித்து வந்த அவரது மகள் கடந்த 2011-ஆம் ஆண்டு Isha Ambani விடுமுறைக்காக இந்தியா வந்துள்ளார்.

அப்போது படிப்பு தொடர்பாக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு இணையதளங்களில் வேகம் இல்லை. அவ்வப்போது இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வேறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, குரல் அழைப்புகளை தவிர, தொலைத்தொடர்பு சேவையில் பயன்படுத்த நிறைய இருக்கிறது. இவையெல்லாம் உங்கள் தலைமுறைக்கு கிடைக்காது என்று கிண்டலாக கூறியுள்ளார்.

அதன் பின் இதைப் பற்றி யோசித்த போதே ஜியோ பற்றிய எண்ணம் வந்ததாகவும், 2016-ல் அதை வெற்றிகரமாக முடித்து காட்டியதாகவும் முகேஷ் அம்பானி அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

ஜியோ வருவதற்கு முக்கிய காரணம் அவர் மகள் தானாம் என்று கூறி பலரும் தற்போது இணையத்தளங்களில் அவர் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வர ஆரம்பித்துவிட்டனர்.