மக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

441

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசியல் நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்திருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரக்க ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறானதொரு பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றிபெறும் பொருட்டு Cambridge Analytica நிறுவனத்தின் உதவியுடன் மக்களின் தகவல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியிருந்தார்.

இதனைக் கண்டறிந்த பேஸ்புக் நிறுவனம் இதற்காக பயன்படுத்தப்பட்ட பேஸ்புக் கணக்குகள் அனைத்தையும் இடைநீக்கம் செய்துள்ளது.

இந்நிறுவனம் அனுமதியின்றி பேஸ்புக் கணக்கின் ஊடாக உள்நுழைந்து சுமார் 270,000 நபர்களின் தகவல்களை தரவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.