கௌரவக் கொலை : குற்றவாளியின் குடும்பமே கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றது அம்பலம்!!

326

கொலைக்குற்றத்திற்காக தண்டனையில் இருக்கும்போதே நபர் ஒருவர் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் குடியிருந்தவர் 25 வயதான ஜஸ்விந்தர் கவுர் சித்து.

கடந்த 2000 ஆம் ஆண்டு யூன் மாதம் இந்தியாவின் பஞாப் மாநிலத்தில் வைத்து மர்ம நபர்களால் ஜஸ்விந்தர் கவுர் சித்து மற்றும் அவரது கணவர் சுக்விந்தர் சிங் சித்து ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜஸ்விந்தர் கவுர் சித்து கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பஞ்சாப் பொலிசார் கொலைக்கான காரணத்தை கண்டறிந்தனர்.

பெற்றோருக்கு விருப்பமில்லாத நபருடன் திருமணம் செய்ததாலையே ஜஸ்விந்தர் கவுர் சித்து கெளரவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடியிருக்கும் ஜஸ்விந்தர் கவுர் சித்துவின் தாயார் மல்கித் கவுர் சித்து மற்றும் உறவினர் சுர்ஜித் சிங் படேஷா ஆகியோரே மறைமுகமாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு இந்திய நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த 7 பேரில் தர்ஷன் சிங் சித்து என்பவரும் ஒருவர், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் இவரே தமது மனைவி மற்றும் மகனுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு நிரந்தர குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த சித்து தமது குடும்பத்துடன் கனடாவின் வான்கூவர் நகருக்கு வந்து நிரந்தர குடியுரிமை பெற தேவையான அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்துள்ளனர்.

இதனிடையே 2014 ஆம் ஆண்டு சித்துவின் மகன் பாரிந்தர் சித்து இந்தியா சென்றுள்ளார். அவர் கனடா திரும்பும் நிலையில் குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவரது தந்தையின் குற்றவியல் நடவடைக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக கனடா அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கோரியது. அதில், தந்தையின் குற்றவியல் நடவடிக்கைகளை மகன் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அரசு விளக்கமளித்தது.

மேலும் தந்தையின் குற்றப் பின்னணி காரணமாக மகனையும் கனடாவுக்குள் அனுமதிப்பது ஏற்க முடியாதது என கனடா நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

ஆனால் பாரிந்தர் சிங் ஏற்கெனவே கனடாவில் குடியிருப்பவர் ஆகையால், அவருக்கு கனடாவில் குடும்பம் இருப்பதால், பாரிந்தருக்கு ஆதரவாகவே அனைத்து விடயங்களும் அமைந்துள்ளதால் பாரிந்தர் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாரிந்தரின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வான்கூவர் நகரில் இருந்து இந்தியா திரும்பிய பின்னர் தர்ஷன் சிங் சித்து கனடா திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.