6 ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்றோருடன் இணைந்த இளைஞர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

329

ஐக்கிய அமீரகத்தின் துபாயில் பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வந்த இளைஞரை அதிகாரிகள் சேர்ந்து மீண்டும் பெற்றோருடன் இணைத்து வைத்தனர்.

பாகிஸ்தான் நாட்டவரான இளைஞர் ஒருவர் பெற்றோரை பிரிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக துபாயில் சாரதியாக பணிபுரிந்து வந்தார்.

அவரது பெற்றோர்கள் பாகிஸ்தானிலும் குடியிருந்து வந்துள்ளனர். ஏழ்மை நிலையில் இருந்த குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டு குறித்த இளைஞர் வேலைக்காக துபாய் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது முயற்சிக்கு துபாய் அரசு பணியே கிட்டியுள்ளது. இதனால் நீண்ட பல ஆண்டுகளாக அவர் பாகிஸ்தான் சென்று தமது பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

இந்த விவகாரம் அதிகாரிகள் பலருக்கும் தெரிந்திருந்த நிலையில், குறித்த இளைஞரின் பெற்றோர் சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் உம்ரா முடித்து துபாய் வழியாக பாகிஸ்தான் செல்ல உள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து குறித்த இளைஞரை அவரது பெற்றோரை சந்திக்க வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றது.

துபாய் சர்வதேச முனையத்தில் இந்த நெகிழ்ச்சி சந்திப்பு நடைபெற்றுள்ளது. நீண்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர் தமது பெற்றோரை சந்தித்த இளைஞர் கண்ணீர் விட்டு அழுதது, பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.