உலகின் கடைசி தலை வெட்டி ஆதிவாசிகள் : எங்கு வாழ்கிறார்கள் தெரியுமா?

562

எதிரியின் தலையை வெட்டியதும் அதற்கு ஆதாரமாக தங்கள் முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் பழங்குடியினரின் கடைசி சந்ததியினர் இந்தியாவின் நாகலாந்தில் வாழ்கிறார்கள்.

கோன்யாக் என்னும் இந்தப் பழங்குடியினர் தங்கள் எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றால், வெற்றி பெற்றதன் அடையாளமாக அவர்களது தலைகளை பரிசுப் பொருள் போல் வைத்துக் கொள்வார்கள்.

1940களில் கிறிஸ்தவ மதம் நாகலாந்திற்கு வந்தபோது இந்தப் பழக்கம் முடிவுக்கு வந்தது. எதிரி வீர்ர்களின் தலைகளைக் கொய்வது எங்கள் கலாச்சாத்தின் ஒரு முக்கிய பகுதி என்கிறார் பழங்குடியினரில் ஒருவர்.

தலைகள், பாதங்கள் மற்றும் கைகளை அவர்கள் பரிசாகக் கொண்டு வந்து கிராமத்திலுள்ள பெரிய மரம் ஒன்றில் கட்டித் தொங்க விடுவது அவர்கள் வழக்கம்.

அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் பல எருமை மாட்டுத் தலைகள் சுவரில் சார்த்தப்பட்டுள்ளன. இது அவர்கள் எத்தனை முறை விருந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு அடையாளம்.

கிறிஸ்தவம் நாகலாந்தில் பரவத் தொடங்கியதும் அவர்கள் செய்த முதல் வேலை, தலை வெட்டுவதை தடை செய்ததுதான்.

இன்று தலைவெட்டி பழங்குடியினரின் கடைசி தலைமுறையினர் தங்கள் 70 வயதுகளில் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லை, அவர்களை சந்திக்க வருபவர்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறார்கள், கனிவுடன் உபசரிக்கிறார்கள்.

தங்கள் கலாச்சாரம் பெரிய அளவில் மாற்றம் அடைந்த பின்னரும் தங்கள் கலாச்சாரம் குறித்து மிகுந்த பெருமையுடன் வாழ்கிறார்கள், இந்த தலை வெட்டிப் பழங்குடியினர்.