ஆலயங்களுக்கு செல்லும்போது இவற்றை செய்யாதீர்கள்!!

406

ஆலயம் என்பது ஆன்மாக்கள் லயிக்கும் இடம். எனவேதான் அங்கு அமைதியாக இருக்கவேண்டுமென பெரியோர்கள் அறிவுறுத்தி உத்தியுள்ளார்கள்.

அதோடு ஆலங்களிற்குள் நாம் செய்யக்கூடாத சில பழக்கங்கள் அவற்றினையும் கூறி உள்ளார்கள். அவையாவன,

கர்ப்ப கிரகத்தினுள் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும் போது திரையிட்டு இருப்பார்கள். அச்சமயம் இறைவனை நாம் வழிபடுதல் கூடாது. அந்தவேளையில் கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.

சுவாமிக்கும், பலிபீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. அதோடு பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது.

ஆலயத்தில் நண்பர்களையோ, பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்கக்கூடாது. ஏனெனில் இறைவனே மிகப் பெரியவன். இறைவனை தவிர அங்கு பெரியவர்கள் யாரும் இல்லை . அதனால் மற்றவரின் காலில் விழுந்து வணங்கக்கூடாது.

விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றைக் கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம்.

பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது.

விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது. அபிஷேகம் நடக்கும் பொழுது கோவிலைச் சுற்றி வரக்கூடாது.

கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளக்கூடாது.

சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.