வவுனியாவில் இடம்பெறும் சூழ்ச்சிகளை நேரடியாக பார்வையிடவே வந்தோம் : எம்.ஏ.சுமந்திரன்!!

492

 

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவில் த.தே.கூட்டமைப்பு தோல்வியுற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே யாழ் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் த.தே.கூட்டமைப்பு (45) நாற்பது நிமிடங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் வவுனியா நகரசபையில் ஆட்சியமைப்பதில் த.வி.கூட்டமைப்பு நடுநிலை வகிப்பதாக வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்கான உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது எட்டு ஆசனங்களை பெற்று அமோக வெற்றிபெற்றிருந்த நிலையில் வவுனியா நகரசபையில் த.தே.கூ ஆட்சி அமைப்பதை பார்வையிடுவதற்காக வந்திருந்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,

செல்வம் அடைக்கலநாதன், எஸ்.சிவமோகன் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் அதிரடியாக எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து ஆட்சியை கைப்பற்றியிருந்த நிலையில் அதிர்ச்சியடைந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து இருந்த போதிலும், விகிதாசார பட்டியலில் தெரிவானதும், அவரே இப்போது நகரசபை தலைவராக தேசியக் கட்சிகளுடன் கூட்டிணைந்து தறிவாகியுள்ளார்.

இவர் மட்டுமல்ல ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி அமைப்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்ததுடன், இவர்களில் மூவரும் விகிதாசார முறை மூலமே தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.