மூன்றாம் உலக போர் தொடங்கினால் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி?

324

சிரியாவில் சமீபத்தில் நடந்த தாக்குதல்களை யாரும் எளிதில் மறக்க முடியாது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதை மேற்கொண்டன, இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால் அமெரிக்கா – ரஷ்யா இடையில் மோதல் போக்கும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வடகொரியா – அமெரிக்கா மோதல் போக்கானது சில காலமாகவே இருந்து வருகின்றன. இந்த விடயங்கள் காரணமாக மூன்றாம் உலக போர் ஏற்படக்கூடிய காலம் வந்துவிட்டதாகவே நம்பப்படுகிறது. சரி, மூன்றாம் உலக போர் தொடங்கி, அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் மக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்?

கெட்டுபோகாத உணவுகள், தண்ணீர், எங்கிருந்தாலும் செய்திகளை அறிந்து கொள்ள ரேடியோ, டார்ச் லைட்டுகள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை எப்போதும் நாம் வைத்து கொள்ள வேண்டும்.

நமது குடும்பத்துடன் அவசரகால திட்டம் குறித்து ஆலோசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தாக்குதல் நடந்தால் நம் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பிரிய நேரலாம், அது போன்ற சமயத்தில் எப்படி ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் முக்கிய கட்டிடங்கள் உள்ளனவா என தெரிந்து வைத்து கொள்ள வேண்டும், ஏனெனில் அது போன்ற கட்டிடங்களில் தான் தாக்குதல்கள் முதலில் நடத்தப்படும்.

அணுகுண்டு வெடிப்பு சமயத்தில் என்ன செய்ய வேண்டும்?

டிவி, ரேடியோ, இணையம் போன்றவற்றில் இது குறித்து செய்திகள் உடனுக்குடன் வரும் நிலையில் அதை தொடர்ந்து கவனித்து அதன்படி செயல்பட வேண்டும்.
தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டால் எங்காவது பதுங்கி கொள்வது நலன் பெயர்க்கும்.

இது போன்ற சமயத்தில் பயப்படாமல் தைரியமாக செயல்பட வேண்டியது நல்லது. அதிகாரிகள் மற்றும் அரசால் அணுகுண்டு வெடிப்பு குறித்த எச்சரிக்கை நீக்கப்படும் வரை வெளியிடங்களில் நடமாடாமல் இருப்பது நல்லது.

வெளியிடங்களில் சிக்கி கொண்டால் என்ன செய்வது?

அணுகுண்டு வெடிப்பு சமயத்தில் பொது இடங்களில் நாம் இருக்கும் பட்சத்தில் எங்காவது நெருப்பை கண்டால் அந்த பக்கம் செல்லக்கூடாது. எங்காவது வெடிகுண்டு சத்தம் கேட்டால், அந்த பக்கம் போகக்கூடாது, இதோடு தரைப்பகுதியில் தலை வைத்து சாய்ந்து கொள்வது நலம்.
முடிந்தவரை நமது இருப்பிடத்தை சீக்கிரம் அடைவது நலம் பெயர்க்கும்.

கதிரியக்க பொருட்கள் நம்மை தாக்குவது போல உணர்ந்தால் நமது வெளிப்புற ஆடையை உடனடியாக கழட்டிவிட வேண்டும், ஏனெனில் ஆடை இருந்தால் கதிரியக்க விடயங்கள் உடனடியாக நமது உடலில் பரவி விடும்.

நெருப்பில் சிக்கி கொள்ளும் பட்சத்தில் உடனடியாக தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி சென்று அதில் நம் உடலில் நெருப்பு பட்டுள்ள இடத்தை நனைக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எந்த நேரத்திலும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்கக்கூடாது.