வெளிநாட்டில் இதை செய்ய முடியாமல் போனது : யாழில் சாதனை படைத்த முதியவர்!!

378


யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் செல்லையா திருச்செல்வம் என்பவர் வான் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியில் கட்டி ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார்.



இந்த சாதனை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள செல்லையா திருச்செல்வம், “இதற்கு முன்னர் இவற்றை செய்ய எனக்கு ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சென்றும் முயற்சி செய்து பார்த்தேன். அங்கு எனக்கு விசா பிரச்சினை இருந்ததால் இதனை செய்ய முடியாமல் போனது.

இலங்கைக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. இந்த காலப்பகுதியில் டிரக்டர் மற்றும் டிப்பர் வாகனங்களை இழுத்திருக்கிறேன். இப்போது ஒரு கிலோ மீற்றர் தூரம் அளவிற்கு இழுக்கின்ற பலம் இருக்கிறது. எனக்கு உடம்பில் சக்தி என்று கிடையாது. மனதில் இழுக்க வேண்டும் என்று எண்ணுவதால் இழுத்தேன்.



கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால அவா. மீண்டும் ஒரு வாகனத்தை கூடிய தூரத்திற்கு இழுத்துச் சென்று சாதனை படைக்க முயற்சி செய்கின்றேன்.” என செல்லையா திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.



அண்மையில் யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, வயாவிளான் வசிக்கும் 54 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவர் வான் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியில் கட்டி ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.