ஐபிஎல்லில் மோசமான சாதனையை படைத்த டோனி!!

379

ஐ.பி.எல் தொடரில் எதிர்முனையில் விளையாடும் துடுப்பாட்ட வீரர்களை ரன்-அவுட் ஆக்கியதில் டோனி முதலிடம் பிடித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 43வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பாட்டம் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக, சென்னை அணி துடுப்பாட்டம் செய்தபோது கடைசி ஓவரை டோனி – சாம் பில்லிங்ஸ் எதிர்கொண்டனர். இந்த ஓவரின் 4வது பந்தில் பில்லிங்ஸ் ஓட்டம் எடுக்க முயன்றார்.

ஆனால், பந்து Bat-யில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது. அப்போது டோனி ஓடுவதற்கு முயன்றார். இதனால் சாம் பில்லிங்ஸ் வேகமாக ஓடினார். ஆனால், டோனி திரும்பி சென்றதால் விக்கெட் கீப்பர் பில்லிங்ஸை ரன்-அவுட் செய்தார்.

இதன்மூலம், ஐ.பி.எல் தொடரில் 12 முறை எதிர்முனை துடுப்பாட்ட வீரர்கள் ரன்-அவுட் ஆக டோனி காரணமாக இருந்துள்ளார். இதனால் அதிக முறை எதிர்முனை துடுப்பாட்ட வீரர்கள் ரன்-அவுட் ஆக காரணமாக இருந்த ரோஹித் ஷர்மாவுடன், டோனி முதல் இடத்தை பிடித்துள்ளார்.