5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : மருத்துவ உலகின் மர்மம்!!

496


1938ல் பெருவில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த லீனா மெடினா என்பவரே உலகின் மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி ஆவார்.



தென் அமெரிக்க நாடான பெருவின் டிக்ராப்போவில் 1933 செப்டம்பர் 27ம் தேதி பிறந்தவர் லீனா. சில்வர் ஸ்மித், விக்டோரியா லோசியா தம்பதியரின் 9 குழந்தைகளில் ஒருவர்.

5 வயது சிறுமியான லீனாவின் வயிறு அசாதாரண வகையில் பெரிதாகிக் கொண்டே வந்ததை அடுத்து அவரது பெற்றோர் அவரை பிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.



வயிற்றில் பெரிய கட்டி வளர்ந்து வருவதாக கருதிய பெற்றோருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. லீனாவை சோதித்த மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதை உறுதி செய்தனர்



சிசேரியன் பிரிவில் அனுமதிக்கப்பட்ட லீனா, 1939 மே மாதம் 14ம் நாள் 6 பவுண்ட் எடையுள்ள ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது அவர் 5 வயது 7 மாதங்கள் 21 நாட்களேயான சிறுமி.5 வயதேயான சிறுமி குழந்தை பெற்றெடுத்தது தொடர்பான செய்தி சர்வதேச மருத்துவத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


சிறுமி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக அவரது தந்தை சில்வர்ஸ்மித் கைது செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் குழு உள்ளிட்டவை நடத்திய விசாரணையில் லீனாவிற்கு 3 வயது முதலே மாதவிலக்கு ஏற்பட்டது தெரியவந்தது.


கருவுற்றது தெரிய வருவதற்கு ஏழரை மாதங்கள் முன்பாக லீனாவிற்கு மாதவிலக்கு ஏற்படுவது நின்றது விசாரணையில் தெரிந்தது. இவ்விவகாரத்தில் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடக்கூடிய மற்றொரு முக்கியமான விடயம் லீனாவிற்கு 5 வயதிலேயே முழு வளர்ச்சி அடைந்திருந்த மார்பகங்கள் இருந்தன என்பது.

ரால் ஜூராடோ என்பவரை இரண்டாவதாக மணந்த லீனா, 1972ல் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். 5 வயதில் தனக்கு பிறந்த முதல் குழந்தைக்கு ஜெரார்டோ என்று லீனா பெயர் வைத்திருந்தார். ஜெரார்டோ 1979ல் தனது 40வது வயதில் காலமானார்

பல்வேறு மருத்துவக்குழுக்கள் விசாரணை செய்து, 5 வயது சிறுமி குழந்தை பெற்றது உண்மை தான் என்று உறுதிபடுத்திய போதிலும், லீனா கருவுறுவதற்கு காரணமானவர் யார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே நீடிக்கிறது.