அவசரமாக தரையிறங்கிய விமானம் : 53 பேர் படுகாயம்!!

333

சவுதி அரேபிய விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் Airlines நிறுவனத்துக்கு சொந்தமான Airbus A330 ஜெட் விமானம், மெக்காவிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி சென்றது.

இந்த விமானத்தில் 151 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில், நடுவானில் விமான எஞ்சினில் உள்ள Hydrolic system திடீர் என செயலிழந்தது. இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த நகரான ஜெட்டாவில் விமானத்தை தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர்.

உடனடியாக தரையிறக்கினால் தான் பெரும் விபத்தை தவிர்க்க முடியும் என்பதால், விமானிகள் மிக அவசரமாக விமானத்தை ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறக்கினர்.

அப்போது, விமானத்தின் முன் பகுதி தரையில் மோதி சேதம் அடைந்தது. இந்த மோதலினால் விமானத்தில் இருந்த பயணிகளில் 52 பேர் காயமடைந்தனர். அதன் பின்னர், அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்த அவசரகால கதவு வழியே வெளியேற்றப்பட்டனர்.

ஒரு பெண் பயணிக்கு மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சவுதி விமான போக்குவரத்து விசாரணை ஆணையம் இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.