பேஸ்புக்கில் கருத்துக்களை சுயமாகவே எழுத புதிய வைரஸ்

615


சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கருத்துக்களை(Comment) எழுதும்வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் கணக்குகளில் மட்டுமே, தற்போதைக்கு,இயங்குகிறது. மற்றநாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும்வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.



இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது கூகிள் குரோம் மற்றும் பயர்பொக்ஸ் இணைய உலாவி(Browser) மென்பொருள் என்றபோர்வையில் கணனியின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கணணியை பயன்படுத்துபவர்,பேஸ்புக்கில் உள் நுழைந்துள்ளாரா (LogIn) எனக் கவனிக்கிறது. உள்நுளைந்துள்ள பட்சத்தில், தான்அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கணணி கோப்பு(File) ஒன்றை இறக்கிக் கொள்கிறது.

இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கானஇணைப்பு(Link) அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை(Comment) பகிர்தல் , நண்பர்கள் பக்கத்தில்கருத்துக்களை(Comment) எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கருத்துக்களை அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு(Friend Request) அனுப்புதல் எனப்பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.



இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை புதுப்பித்துக் (Update) கொண்டு செயல்படுகிறது.மைக்ரோசொப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினை தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது.



தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது.பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத மென்பொருட்களை(Softwares) தரவிறக்கம்(Download) செய்ய வேண்டாம் என மைக்ரோசொப்ட் மற்றும் பிரபல வைரஸ் எதிர்ப்புநிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்தியபின்னர், அதிலிருந்து கட்டாயமாக வெளியேறிட(Log Out) செய்திட வேண்டும்எனவும் மைக்ரோசொப்ட்அறிவுறுத்தியுள்ளது.