நாட்டை காக்க வேண்டும் என்பவனை கொன்றுவிட்டதே பொலிஸ் : கதறித் துடிக்கும் தந்தை!!

279

இராணுவ உடை அணிந்து நாட்டை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த என் மகனை பொலிசார் இப்படி கொன்றுவிட்டனரே என்று தந்தை கதறியுள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக தற்போது வரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பொலிசார் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் ரஞ்சித் என்ற தன்னுடைய ஒரே மகனை இழந்து பாஸ்கர் என்பவர் தவித்து வருகிறார்.

இது குறித்து ரஞ்சித்தின் தந்தை பாஸ்கர் கண்ணீர் மல்க கூறுகையில், என் மகன் இராணுவத்தில் சேர ஆர்வமுடன் இருந்தான்.

அதுவே அவனுடைய ஒற்றைக் கனவாகவும், இலக்காவும் இருந்தது. சமீபத்தில் கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ராணுவ ஆட்சேர்ப்பில் பங்கேற்றான்.

ஆனால் அதில் அவன் தேர்ச்சி அடையவில்லை. அப்போது நான் எல்லோரும் முதல் முறையே வெற்றி பெறுவதில்லை, வருத்தப்படாதே என்று நான் கூறினேன.
அவன் நான் மறுபடியும் முயற்சி செய்கிறேன் அப்பா என்று கூறினான்.

அவனது முழு உலகமும் ஜிம்முக்கு செல்வதிலேயே இருந்தது. துப்பாக்கிச் சூடு நடந்தநாளில் கூட வீட்டில் காலை சாப்பாட்டை முடித்துவிட்டு 11.30 மணிக்குதான் கிளம்பினான்.

அவன் போராட்டத்தை தான் பார்க்க போகிறான் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் சுமார் 1 மணி நேரத்தில் அதாவது 12.30 மணிக்கு அவன் இறந்துவிட்டான் என எங்களுக்கு அழைப்பு வந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிணவறையில் மகனைப் பார்த்த போது பாஸ்கரன், என்னுடைய ஒரு மகனை இழந்துவிட்டேனே என்று கதறி அழுதுள்ளார்.