உலகின் ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை!!

321

உலகளாவிய ரீதியில் காலநிலை அபாய தரவில் இலங்கை ஆபத்தான எல்லையாக பெயரிடப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில், இயற்கை அனர்த்தங்களினால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

அந்த அறிக்கையில் முதலாவது இடத்தில் ஹெய்ட்டி உள்ளது. இரண்டாம் மூன்றாம் இடங்களில் சிம்பாப்வே மற்றும் பீஜீ நாடுகள் உள்ளன.

1997 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அறிக்கையில் இலங்கை 95 வது இடத்தை பிடித்திருந்தது. எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பாதிப்புகள் காரணமாக அந்த பட்டியலில் இலங்கை உயர் நிலையை அடைந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை, பீஜீ, வியட்நாம் போன்ற நாடுகள் வெகு விரைவான காலப்பகுதிக்குள் பல இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் என அந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சிம்பாப்பே வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளது. அத்துடன் புவி வெப்பமடைதல் காரணமாகவும் இலங்கை உட்பட குறித்த 4 நாடு பாதிக்கப்படும் என புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.