முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியின் மறுபக்கம் : சுவாரசிய காதல் கதை!!

1180

இந்திய தொழிலதிபரும், மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீத்தா அம்பானி. 55 வயது கடந்த பின்னும் இன்னும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இவர் இயங்கி வருகிறார்.

மும்பையின் புறநகர் பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீத்தா கோடீஸ்வர குடும்பத்தில் மனைவியாக நுழைந்த கதை சுவாரஸ்யமானது.

வணிகவியலில் பட்டம் பெற்ற நீத்தா அம்பானி ஒரு தனியார் பள்ளியில் சிறு குழந்தைகளுக்கான ஆசிரியர் பணியில் வேலைக்கு சேர்ந்தார்.

கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நீத்தா அம்பானி பரதநாட்டியம் பயின்றவர். பல நாடுகளுக்கும் சென்று தன் பரதத் திறமையை வெளிப்படுத்தி அரங்கேற்றமும் செய்தவர்.

இது போன்ற ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சியில் தான் முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி நீத்தாவை பார்த்திருக்கிறார்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நீத்தா திருபாய் அம்பானியின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது சரியாக பேசவில்லை. இதன்பின் இவரது அப்பாவை தொடர்பு கொண்ட திருபாய் அம்பானி அவர் மூலம் நீத்தா வின் சம்மதத்தை கேட்டிருக்கிறார்.

மிக பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான திருபாய் அம்பானி தன் மகனுக்காக தன்னை பெண் கேட்டு வந்ததை அறிந்த நீத்தா அதிர்ச்சியில் உறைந்து போனார். இருப்பினும் உடனடியாக முடிவு எதையும் அவர் கூறவில்லை.

அதன் பின் முகேஷ் அம்பானியும் நீத்தாவும் பெற்றோர் சம்மதத்துடன் ஆறேழு முறை சந்தித்துள்ளனர். அப்போதும் தங்கள் திருமணம் பற்றிய முடிவுகளை இவர்கள் கூறிக் கொள்ளவில்லை.

ஒருமுறை மும்பையின் பரபரப்பான டிராபிக்கில் சிக்னலுக்காக காத்திருக்கும்போது, அதற்கு மேலும் பொறுக்க முடியாத முகேஷ் அம்பானி நீத்தாவிடம் என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று ப்ரபோஸ் செய்துள்ளார்.

அப்போது சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர்ந்தது, பின்னால் இருந்தவர்கள் ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தனர். முகேஷ் அம்பானியோ நீத்தாவின் பதில் தெரியாமல் தான் வண்டியை நகர்த்த போவதில்லை என அடம்பிடித்துள்ளார்.

அதற்கு பிறகு நீத்தா எஸ், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறிய பின்புதான் காரை நகர்த்தியிருக்கிறார் முகேஷ்.

அதற்கு பின் திருபாய் அம்பானி இவர்களிருவருக்கும் முறைப்படி திருமணம் நடத்தி வைத்தார்.

இப்படித்தான் பெற்றோரால் பார்க்கப்பட்டு முகேஷ் அம்பானியால் காதலிக்கப்பட்டு அதன் பின் அவரின் மனைவியாகியிருக்கிறார் நீத்தா அம்பானி

கோடீஸ்வரர் மனைவி ஆனபின்னும் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்து செய்து வந்தார் நீத்தா அம்பானி.

ஆசிரியர் பனியின் மீதான நீத்தாவின் காதலை புரிந்து கொண்ட முகேஷ் அம்பானி தன் மனைவிக்கு ஆதரவாக இருந்து அவர் பணிபுரிவதை அனுமதித்தார்.

1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நீத்தாவின் மாணவர்களின் பெற்றோர் ஒருவர் நீத்தாவிடம் இதற்கான நுழைவு சீட்டை கொடுத்து கிரிக்கெட் காண வாருங்கள் என்று அழைத்துள்ளனர்.

இதனை வாங்க மறுத்த நீத்தா போட்டியின் போது விஐபிக்களுக்கான பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த போதுதான் இவர் முகேஷ் அம்பானியின் மனைவி என்பதே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அந்த அளவிற்கு யாரிடமும் தன்னை பற்றி இவர் காட்டிக் கொள்ளாதவர்.

அதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் தன் ஆசிரியர் பதவியை விட்டு விலகி ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்தார் நீத்தா.

தனது மனைவி ஆசிரியராக இருந்ததால் இப்போதெல்லாம் அதிக நேரம் கற்பிப்பதிலேயே செலவழிப்பதாக முகேஷ் அம்பானி விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இனி வரும் ஆண்டுகளில் இவர்கள் இருவரும் இணைந்து கல்வி துறையில் கால் பதிக்க போவதாகவும் அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.

ஆசிரியையாக பணியாற்றிய போது நீத்தா வாங்கிய சம்பளம் எண்ணூறு ரூபாய் மட்டுமே. ஆனால் இப்போதோ மும்பையின் திருபாய் அம்பானி பள்ளியை இவர் நிர்வகித்து வருகிறார்.

இப்போதும் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் தனது காதல் மனைவிக்கு வியக்கத்தக்க பரிசுகள் கொடுத்து அசத்தும் சூப்பர் காதலனாக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார்.

இவர்களின் காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக ஆகாஷ், ஆனந்த் என்கிற இரு மகன்களும் மற்றும் இஷா என்கிற மகளும் உள்ளனர்.

இட நெருக்கடி நிறைந்த மும்பை மாநகரில் 27 மாடிகளை கொண்ட ஒரு மாளிகையில் இவர்கள் வசித்து வருகின்றனர். உலகிலேயே மிகப் பெரிய வீடுகளில் இவரது வீடும் ஒன்று. இதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்பட்ட வீடுகள் மாளிகைகள் ஆனாலும் நீத்தா அம்பானி போன்ற பெண்கள் தான் அதனை அன்பு நிறைந்த இல்லமாக மாற்றி அமைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.