இந்திய அழகிக்காக போட்டி போடும் 60 மணமகன்கள் : யார் அவர் : சுவாரசிய சம்பவம்!!

274


 

திருமணம் என்பது பெண்ணின் வாழ்வின் இறுதி கட்டமாக பார்க்கப்படுகிறது. தன் மகளை யாருக்கேனும் திருமணம் செய்து கொடுத்து விட்டால் தனது கடமை முடிந்ததாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.



ஆனால் இப்போது பார்க்க போகும் திருமணம் அப்படி பட்டதல்ல. குறிப்பிடப்பட்ட மணமகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரே மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்.அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி பெண்ணை மணக்க நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு 60 மாப்பிள்ளைகள் விண்ணப்பித்திருந்தார்கள்.

தனது ஏழு வயதில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்றிருக்கிறார் ஒரு சிறுமி. அவர் வழி தவறி சென்றாரா அல்லது யாரேனும் கடத்தி சென்றார்களா என்பது பற்றி அவருக்கே சரியாக நினைவில்லை.



இந்தியாவிலிருந்து லாகூருக்கு செல்லும் சம்ஜஹுதா எக்ஸ்பிரஸில் தனியாக அமர்ந்திருந்த இந்த சிறுமியை மீது பாகிஸ்தான் ஹோமில் சேர்த்தனர் சில நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள்.



தன்னுடைய அடையாளங்கள் மற்ற விடயங்களை சொல்ல தெரியதால் அவர் அங்கேயே வளர்க்கப்பட்டார்.இருப்பினும் சிறுமி கூறிய சின்ன சின்ன தகவல்களின் படி பார்க்கையில் சிறுமி இந்தியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதியானது.


அதன்பின் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வந்த சிறுமியை தாய் தந்தையருடன் இணைத்து வைக்க வேண்டும் என்று அங்கொரு விருப்பம் நிலவியது.

சல்மான்கான் நடித்த பாஜிராங் பைஜான் என்கிற திரைப்படம் மூலம் அங்குள்ளோரிடம் இந்த விருப்பம் தீவிரமாகியிருக்கிறது. கதைப்படி பாகிஸ்தானில் வாழும் இந்திய சிறுமியை அவளது தாயோடு சேர்த்து வைப்பார்கள்.


2015ஆம் ஆண்டு பல முயற்சிகளுக்கு பின் இந்தியா அனுப்பி வைக்கப்பட்ட அந்த சிறுமிதான் தற்போதையை மணமகள். இவருக்கு கீதா என பெயரிடப்பட்டுள்ளது. இவர் காது கேட்காது மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளி.

இந்தியாவிற்கு வந்தபின் கீதாவை அவரது தாய்தகப்பனோடு சேர்த்து வைக்க பல முயற்சிகள் நடந்தன.இருப்பினும் பல பெற்றோர்களால் கீதாவை அடையாளம் காண முடியவில்லை, கீதாவும் பலரை நிராகரித்திருக்கிறார், இதனால் பெற்றோர் கண்டுபிடிக்கும் முயற்சி நீர்த்து போயிருந்தது.

இந்நிலையில் கீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்கிற எண்ணம் உதித்தது. கீதாவிற்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைக்க மத்திய பிரதேச முதலமைச்சரான சிவராஜ் பாட்டிலே தயாராக இருந்தார் என்பதுதான் சிறப்பான விடயம்.

ஆகவே கீதாவை இந்தியாவிற்கு அனுமதித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் , மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் பாட்டிலும் இணைந்து இந்த திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.


தனிப்பட்ட அதிகாரிகளிடம் கீதாவிற்கு மாப்பிள்ளை தேடும் படலம் ஒப்படைக்கப்பட்டது. கீதாவை போலவே மணமகனும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்று திறனாளியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கிய விதியாக இருந்தது.

இது தவிர தனது வலைதள பக்கத்திலும் அமைச்சர் சுஷ்மா கீதாவிற்கான மாப்பிள்ளை தேடல் பற்றிய விவரங்கள் கொடுத்திருந்தார்.மேலும் கீதாவை மணப்பவருக்கு அரசு வேலையும் , வீடும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவற்றில் 60 நபர்களை தேர்வு செய்தனர் .இருப்பினும் கிடைக்க போகும் அரசு வேலைக்காக ஆசைப்பட்டு பலர் விண்ணப்பித்திருந்ததால் அவர்களை நிராகரித்த குழுவினர் இறுதியாக 15 பேரை தேர்வு செய்திருக்கிறது.

இவர்களில் எழுத்தாளர், ராணுவ அதிகாரி, விவசாயி , பொறியாளர் ஆகியோரும் அடங்குவர்.அவர்களில் பெரும்பாலோனோர் ராஜஸ்தான் உத்தர பிரதேசம் , பிஹார், உத்ராஞ்சல், குஜராத் மற்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

தற்போது கீதாவின் பாதுகாவலராக மோனிகா எனும் பெண் செயல்பட்டு வருகிறார். கீதாவுக்கென்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் இந்த வேலையானது எங்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை தருகிறது என்கிறார்.

கீதாவிற்கான வாழ்க்கையை அவரது விருப்பப்படி சந்தோஷமானதாய் அமைத்து கொள்ள அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும் மணமகனை தேர்வு செய்யும் இறுதி முடிவு கீதாவின் கையில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.

இரு உள்ளங்கள் இணைகையில் உதடுகளின் பேச்சு தேவையே இல்லை என்பதற்கு நடக்கப்போகும் கீதாவின் திருமணம் ஒரு சாட்சியாக இருக்கக்கூடும்.