இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான செய்தி!!

565

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல வாகனங்களின் விலை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வாகன விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள புதிய வரி முறை காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னர் வாகன இயந்திரத்தின் திறனுக்கமைய வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டன. எனினும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வரி முறைக்கமைய வரி தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதாக சங்கத்தின் தலைவர் கிஹான் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி இதில் பாரிய தாக்கத்தை செலுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பல இறக்குமதியாளர்கள் இதுவரையில் பழைய வரி முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த விலையிலேயே விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எதிர்வரும் நாட்களில் வானங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.