வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்த வெள்ளை நாகம்!!

617

வவுனியா, புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் போது வெள்ளை நாகம் காட்சி கொடுத்தமை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மண்ணின் புகழ்மிகு புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

விசம் தீண்டியவர்களுக்கு மருந்து வழங்கும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்ற போது வெள்ளை நாகம் அங்கு வந்துள்ளது.

இதன்போது வெள்ளை நாகத்திற்கு பக்தர்கள் பால் மற்றும் முட்டை போன்றவற்றை படைத்து வழிபட்டுள்ளனர். சில நிமிடங்கள் அங்கிருந்த வெள்ளை நாகம் பின் அங்கிருந்து சென்றுள்ளது.