சொந்த மாமாவை கொடூரமாக கொன்ற கிம் ஜாங் உன் : அதிரவைக்கும் காரணம்!!

326

ஆட்சி அதிகாரத்திலிருந்து தன்னை தூக்கியெறிய திட்டமிட்டதாக கூறி தனது சொந்த மாமாவை வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் கொலை செய்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வட கொரியவில் தவறு செய்பவர்களுக்கு பல்வேறு விதமான கொடூர தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் துரோகம் செய்ததாக எண்ணி கிம் ஜாங், அவரின் மாமாவை கொலை செய்தார்.

வடகொரியாவில் சக்தி வாய்ந்த அரசு அதிகாரியாக திகழ்ந்தவர் Jang Song-thaek (67) கிம் ஜாங்கின் மாமாவான இவர் சீனாவின் உதவியோடு அவரின் அரசை கவிழ்க்க நினைத்து அதற்கான வேலைகளில் ரகசியமாக ஈடுப்பட்டுள்ளார்.

அதோடு கிம் ஜாங் உன்-னின் சகோதரர் கிம் ஜாங் நம்-ஐ நாட்டின் தலைவராக ஆக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த விடயம் சீனாவில் இருக்கும் அரசு அதிகாரிகள் மூலம் கிம் ஜாங்குக்கு தெரியவந்தது.

இதையடுத்து நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் Song-thaek ஈடுப்பட்டார் என கூறி அவரை கொலை செய்ய கிம் ஜாங் உத்தரவிட்டார். கடந்த 2013-ல் Song-thaek கொல்லப்பட்டார்.

இதனிடையில் கிம் ஜாங் நம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வட கொரியா தான் கிம் ஜாங் நம்-ஐ கொலை செய்தது என தென் கொரியா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தனது ஆட்சிக்கு ஆபத்து என்றால் கிம் ஜங் உன் யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய தயங்கமாட்டார் என இந்த சம்பவங்களை நினைவுபடுத்தி சமூக வலை தளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.