ஒதுக்கப்பட்ட குடும்பம் : இது ஒரு வித்தியாசமான உண்மைக்கதை!!

671


கேரளாவில் காதலித்தது ஒரு குற்றம் கருதி ஒரு குடும்பத்தை ஊரே ஒதுக்கி வைத்துள்ள உண்மை சம்பவம் நடந்துள்ளது.



கேரளாவில் இடுக்கி பகுதியில் சுசனிக்குடி என்ற பகுதி உள்ளது. சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.

அங்கு முதுவான்மார் என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கிராமமாக இருந்த இந்த பகுதியில் இப்போது மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அங்கிருந்து வெளியேறியவர்கள் தீர்த்தமலைகுடி என்ற இடத்தில் குடியேறினார்கன்.



அங்குள்ள மக்கள் மலையாளமும், தமிழும் கலந்த முதுவான்மார் மொழியில் பேசுகிறார்கள். அங்கிருந்துதான் அழகர்சாமி குடும்பம் நான்கு வருடங்களுக்கு முன்பு ஊர்விலக்கு செய்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.




அழகர்சாமியின் மகள் ஷைலா படித்து முடித்ததும் பீகாரில் நர்ஸ் வேலை கிடைத்தது. அந்த மாநிலத்தை சேர்ந்த ராம்பிரவேஷ் என்பவர், அக்காளை காதலித்தார்.

அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பியதை எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் சொன்னோம். முதலில் அமைதியாக கேட்டவர்கள் பின்பு ஒன்று சேர்ந்து எதிர்த்தார்கள். அடுத்து எங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவரை அவசரமாக தயார்செய்து அவரை என் அக்காளுக்கு திருமணம் செய்துவைக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள்.


அந்த நபர் பள்ளிக்கூடத்திற்குகூட செல்லாதவர். அவரை திருமணம் செய்தால் அதோடு அக்காளின் வாழ்க்கை முடிந்து போகும் என்பதால் நாங்கள் சம்மதிக்கவில்லை.

ஒரு குடும்பத்தை அவர்கள் ஊர்விலக்கு செய்துவிட்டால், பின்பு அவர்களுக்கும் முதுவான் சமூகத்தினருக்கும் எந்த தொடர்பும் இருக்காது. வசிக்கும் வீட்டைவிட்டும் வெளியேறிவிடவேண்டும். அந்த சமூகத்தோடு இணைந்து வாழும் குடும்பத்தினர் வீடுகளுக்கோ, உறவினர்கள் வீடுகளுக்கோ செல்ல முடியாது. அவர்களிடம் பேசவும் கூடாது.

குடும்பத்தில் யாராவது இறந்துபோனாலும் அவரை பார்க்கவும் அனுமதிகிடையாது. ஊர்விலக்கப்பட்ட குடும்பத்தினரோடு, அந்த சமூகத்தினர் யாராவது தொடர்பு வைத்திருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்படுவார்கள் அதனால் கடுமையான நெருக்கடிக்குள் அழகர்சாமி சிக்கினார்.

என் மகள் எந்த தப்பும் செய்யவில்லை. அவள் விரும்பியவரோடு வாழ அவளுக்கு இருக்கும் உரிமையை யார் தடுக்க முடியும்? என்பதற்காக, தனது மகள் ஆசைப்பட்டவரை திருமணம் செய்துவைத்துள்ளார்.


இதன் காரணத்தால் அழகர்சாமியின் குடும்பமே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

காடுகளை நம்பித்தான் எங்கள் சமூக மக்கள் வாழ்வார்கள். காடுகளை திருத்தி விவசாயம் செய்வார்கள். நாங்கள் எங்கள் விவசாய பூமியையும், சொந்த வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறி வாடகை வீட்டில் வசிக்கிறோம். கூலி வேலைபார்த்துதான் வாழ்க்கையை ஓட்டுகிறோம்.

ஊர் விலக்கப்பட்ட பின்பு என் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் எங்கள் சமூகத்தை சேர்ந்த யாரும் வந்து பார்க்கவில்லை. எங்கள் சொந்த வீடும் அங்கு உருக்குலைந்துபோய் கிடக்கிறது என்கிறார் அழகர்சாமியின் மனைவி கன்னியம்மா.