உலகின் அதிக எடைகொண்ட குண்டு சிறுவன் இப்போது எப்படி இருக்கின்றான் தெரியுமா?

483

உலகிலேயே அதிக எடையுடன் கூடிய குண்டு பையன் Mihir Jain, தற்போது 65 கிலோ எடையை குறைத்துள்ளான்.

இந்தியாவின் டெல்லியை சேர்ந்தவர் Mihir Jain(வயது 14), இவனது எடை 237 கிலோ, உலகிலேயே மிக அதிக எடையுடைய பையன்.

பிறக்கும்போதே வழக்கமான எடையுடன் பிறந்தாலும், துரித உணவுகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் மூலம் இவனது எடை அதிகரித்துக் கொண்டே சென்றது.

ஐந்து வயதிலேயே 80 கிலோ வரை எடை அதிகரித்தது, மருத்துவரிடம் சென்றபோது தான் இவனது பிரச்சனையே பெற்றோருக்கு புரியவந்தது.

இவனது தாய் கூறுகையில், ஐந்து வயதில் தான் நாங்கள் இதனை உணர்ந்தோம்.

சிறுவயதாக இருந்ததால் அறுவைசிகிச்சையும் செய்ய முடியாது என மருத்துவர் கூறினார், அதற்கு பதிலாக மாத்திரைகள் வழங்கினார்.

அதை தொடர்ச்சியாக உட்கொண்டதால் அவனது கால்கள் பலவீனமாகின, வருடங்கள் செல்ல செல்ல ஓரிடத்திலேயே முடங்கிப் போனான்.

வறுத்த உருளைக்கிழங்கு, காய்கறி கட்லெட், அரிசி சாதம், ஐஸ்கிரீம், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் என தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்ததால் உடல் எடை மேலும் அதிகரித்தது.

இதனால் நீரிழிவு, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் ரத்த அழுத்த பிரச்சனைகளும் வந்தது, அப்போதுதான் உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சைகள் பற்றி தெரிந்து கொண்டோம்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றோம், முதல் மூன்று மாதங்கள் டயட்டில் இருந்தான், இதன்படி ஏப்ரலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது, தற்போது 65 கிலோ வரை எடையை குறைத்துள்ளான் என தெரிவித்துள்ளார்.

முதலில் அறுவைசிகிச்சை பயந்ததாகவும், தற்போது சந்தோஷமாக இருப்பதாகவும் Mihir Jain தெரிவித்துள்ளார்.

மேலும் உடல் எடையை குறைத்து மற்ற பிள்ளைகள் போன்று தானும் பள்ளிக்கு சென்று படிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.