12 வயதில் திருமணம் : தற்கொலை முயற்சி : இன்று கோடிகளில் புரளும் சாதனைப் பெண்!!

434


12 வயதில் திருமணமாகி, கணவன் குடும்பத்தாரால் கொடுமைப்படுத்தப்பட்ட கல்பனா சரோஜ், வெற்றியாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

Kamani Tubes Limited, Kalpana Builders and Developers, Kalpana Saroj & Associates உட்பட ஆறு நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் கல்பனா சரோஜ். இவரது ஆண்டு வருமானம் 2000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.



ஏழை குடும்பத்தில் பிறந்து, 12 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட கல்பனா சாதனையாளராய் மிளிர்கிறார்.

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் 1958ம் ஆண்டு பிறந்தார், ஏழாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட, தானேவில் வசித்துள்ளார்.



ஆறு மாதங்களில் கணவன் குடும்பத்தார் துன்புறுத்த ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனாராம் கல்பனா.



ஒருநாள் தந்தை வந்து பார்த்ததும், அதிர்ச்சியில் உறைந்துபோய் தன் மகளை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.


அங்கேயோ சமுதாயத்தில் பல்வேறு கேளி, கிண்டலுக்கு ஆளான கல்பனா தற்கொலை செய்ய முடிவெடுத்தார். ஒருவழியாக அவரை காப்பாற்றிய குடும்பத்தினர், ஆறுதல் தந்து தேற்றினர்.

பின்னர் குடும்பத்தாரின் சம்மதத்துடன் மும்பை வந்த கல்பனா ரூ.60 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய கல்பனா, வங்கியில் ரூ.50,000 கடன்பெற்று சிறிய கடையை தொடங்கினார்.


மும்பையிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தன் குடும்பத்தாரையும் தன்னுடன் தங்கவைத்துக் கொண்டார். இதற்கிடையே கல்பனாவின் சகோதரி இறந்துவிட, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணம் தீவிரமானது.

1978-ம் ஆண்டில், வேலையற்றவர்களுக்கு உதவும் வகையில் சுஷிக்ஷித் பெரோஸ்கார் யுவக் சங்கத்னா (Sushikshit Berozgar Yuvak Sanghatana) என்ற அமைப்பைத் தொடங்கினார்.

அந்த அமைப்பில் 3000 பேர் சேர்ந்தனர், அவர்களுக்கு வேலை கிடைக்க வழி செய்யப்பட்டது.

மரச்சாமான்கள், துணிக்கடை, ரியல் எஸ்டேட் என பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றி பாதையை நோக்கிய பயணிக்க தொடங்கினார்.


இதனை தொடர்ந்து காமானி டியூப்ஸ் என்ற நலிவடைந்த நிறுவனத்தை எடுத்து அதற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார், இதனால் கல்பனாவின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அவருடைய ஒட்டு மொத்த நிறுவனங்களின் இப்போதைய ஆண்டு வருவாய் 2000 கோடி ரூபாய்.