பலம்வாய்ந்த தென்னாபிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி!!

464


தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 278 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது.



இலங்கை அணியின் பிரபல வீரர்களான டில்ருவான் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இனிங்சில் 73 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.



நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இனிங்சில் 287 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், திமுத் கருணாரத்ன 158 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.



இந்நிலையில், தென் ஆப்ரிக்க அணி முதல் இனிங்சில் 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.


இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, தென் ஆப்ரிக்கா அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை அணி 278 ஓட்டங்களினால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை தனதாக்கியது.


டில்ருவான் பெரேரா 06 விக்கட்களையும், ரங்கன ஹேரத் 03 விக்கட்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வழவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுக்களோடு இப்போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுக்களை சாய்த்த ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் மொத்தமாக 423 விக்கெட்டுக்களுடன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது.

தமது விருந்தினர்களை முதல் டெஸ்ட் போட்டியில் தோற்கடித்திருக்கும் இலங்கை, கொழும்பில் நடைபெறவுள்ள தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (20) மோதுகின்றது.