வவுனியாவில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – 2018!!

394


தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணிப் போராளிகளான திருவாளர்கள் ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிவபாதம் உட்பட 1983 ஜீலையில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53பேர் மற்றும் இக் கலவரத்தின் மூலம் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35வது ஆண்டு நினைவாக,

வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க அனுமதியுடன் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) நடாத்தும் அணிக்கு 11பேர் கொண்ட விலகல் முறையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று (21.07.2018) காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலமையில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.



கறுப்பு ஜீலை நினைவேந்தலின் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து மங்களவிளக்கேற்றியதுடன் பாராளுமன்ற உறுப்பினர், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்களின் உரையுடன் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் நடராஜசிங்கம் (ரவி) , வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதலைவர் யோகராஜா , தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் குருஸ்,



வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் அரவிந்தன், உதைப்பந்தாட்ட சங்க தலைவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், கழகங்களின் உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.