வவுனியாவில் வாகனம், ஆளனி பற்றாக்குறையே குப்பை அகற்றுவதில் தாமதம் : நகரசபை உப நகரபிதா!!

336

வவுனியா கோவில்குளம் பகுதியில் குப்பைகள் கடந்த நான்கு மாதங்களாக அகற்றப்படவில்லை என நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் (மோகன்) குற்றச்சாட்டு ஒன்றை வவுனியா நகரசபையின் கடந்த சபை அமர்வில் முன்வைத்திருந்தார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக வவுனியா நகரசபையின் உப நகரபிதா எஸ்.குமாரசாமி கோவில்குளம் பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி இக்குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்திருந்தார். எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த எஸ்.குமாரசாமி..

எமது நகரசபைக்கு ஆளனி பற்றாக்குறை, வாகனம் பற்றாக்குறை என்பன காணப்படுகின்றது. இருந்தபோதும் இருக்கிற வளங்களை பயனபடுத்தி சேவையாற்றி வருகிறோம். வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் கோவில்குளம் பகுதிகளில் குப்பைகளை அகற்றி வருகிறோம். எனவே கோவில்குளம் நகரசபை உறுப்பினர் மோகனின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருந்தார்.

இப்பிரச்சனை தொடர்பாக கோவில்குளம் நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் கருத்து தெரிவிக்கையில், வவுனியா நகரசபையின் குப்பை அகற்றும் வாகனம் பிரதான வீதிகளில் குப்பைகளை அள்ளிச்செல்வதுடன் அவர்கள் கடமை முடிந்துவிடுகிறது. ஆனால் கோவில்குளம் உள்வீதிகளில் அவர்கள் குப்பைகளை அள்ளுவதில்லை அவ்வாறான செயற்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.