வெளியான ஒரே ஒரு புகைப்படம் : வசமாக சிக்கி கொண்ட பிரபல வீரர்!!

431


ஆறு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிரபல நீச்சல் வீரர் ரையன் லோக்டே அதிகளவு ஐ.வி எனும் ஊக்கமருந்தை பயன்படுத்தியதால் 14 மாதங்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.



அமெரிக்க நீச்சல் வீரரான ரையன் லோக்டே தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த மே மாதம் வெளியிட்ட புகைப்படத்தில் ஐ.வி மருந்தை உடலில் செலுத்திக் கொண்டிருந்த காட்சி பதிவாகியிருந்தது.

ஐ.வி மருந்து தடை செய்யப்பட்ட மருந்து அல்ல, என்றாலும் அதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.



இந்த புகைப்படத்தை கண்ட அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் (USADA) இது குறித்து விசாரணை நடத்தியதில், ரையன் 12மணி நேரத்திற்குள், 100 மில்லிக்கும் அதிகமான ஐ.வி மருந்தை எந்த விதமான மருத்துவ சிகிச்சை அவசியமும் இன்றி பயன்படுத்தியதாக தெரிவித்தது.



இதையடுத்து அதிகளவில் ஐ.வி ஊக்கமருந்தை பயன்படுத்திய குற்றத்திற்காக, ரையன் மே மாதம் 24 -ஆம் திகதியில் இருந்து (அந்த மருந்தை அவர் பயன்படுத்திய நாள்) கணக்கிடப்பட்டு 14 மாதங்களுக்கு நீச்சல் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.


இதுகுறித்து ரையன் கூறுகையில், நான் சட்டத்திற்கு புறம்பாக எதையும் உட்கொள்ளவில்லை. அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்தது என கூறியுள்ளார்.