எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு : விபரம் உள்ளே!!

400


எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.



இன்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார்.

அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவாலும் , சூப்பர் டீசல் லீற்றரின் விலை ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



இந்த விலை மாற்றத்துக்கு அமைவாக தற்போது 155 ரூபாவாக காணப்படும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 157 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.



மேலும், 129 ரூபாவாக காணப்பட்ட சூப்பர் டீசல் லீற்றரின் விலை 130 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும் , ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒடோ டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி , ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை தொடர்ந்து 145 ரூபாய்க்கும் , ஒடோ டீசல் லீற்றரின் விலை 118 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.