சிரிப்பு வாயுவை தொடர்ந்து குடித்ததால் 24 வயது தாய்க்கு நேர்ந்த சோகம்!!

289

பிரித்தானியாவில் பலூனில் இருக்கும் நைட்ரஸ் ஆக்ஸைடு காற்றை குடித்த தாய்க்கு முதுகெலும்பு செயலிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Bristol பகுதியை சேர்ந்தவர் Olivia Golding (24). இவர் வார விடுமுறை நாட்களில் எப்பொழுதும் தன்னுடைய மகன் Parker-ஐ கணவரிடம் ஒப்படைத்து விட்டு, சிரிப்பை ஏற்படுத்தும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடுவை பலூனில் இருந்து குடித்து வந்துள்ளார்.

அடிக்கடி இந்த வாயுவை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்த Olivia கடந்த சில நாட்களுக்கு முன் வந்த வார விடுறையில் 15 பலூன்களின் காற்றினை குடித்துள்ளார். பின்னர் உறங்க சென்ற அவருக்கு விழிப்பு ஏற்பட்டபோது, கை, கால்கள் மற்றும் மார்பு பகுதிகளில் உணர்வு இல்லாததை புரிந்து கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட Olivia-விற்கு Lichtheim எனும் நோய் இருப்பதும், அதனால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பின்னர் Olivia-விடம் மருத்துவர்கள் கேட்டறிந்தபோது, அளவுக்கு அதிகமான நைட்ரஸ் ஆக்ஸைடு எடுத்துக்கொண்டதாலே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனால் பெரிதும் மனமுடைந்துள்ள Olivia-விற்கு தற்போது பிசியோதெரபிஸ்ட்கள் நடைப்பயிற்சி கொடுத்து வருகின்றனர். மேலும் இதுபோன்று விளையாட்டுதனமாக பலூன் காற்றை குடிப்பவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.