அன்று குப்பை தொட்டியில் வாழ்ந்தவரின் இன்றைய நிலை : நெகிழ்ச்சி சம்பவம்!!

479

கோயம்புத்தூரில் 20 வருடங்களாக குப்பை தொட்டியில் வாழ்க்கை நடத்தியவரை ஈரநெஞ்சம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் காப்பாற்றி அவருக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளார்.

20 வருடங்களுக்கு மேலாக ஒரே உடையில், ஜடா முடிகளுடன் சாலையில் கிடைப்பதை சாப்பிட்டு கொண்டு, குப்பை தொட்டியில் வாழ்க்கை நடத்தியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. இவரை பார்ப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி புறக்கணித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில்தான் , ஈரநெஞ்சம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இவருக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என அழைத்து சென்றுள்ளார்.

அவரது முடி திருத்தப்பட்டு புத்தாடைகளும் அணிவித்துள்ளனர். அதற்குப்பின் இவரது நடத்தை முற்றிலும் மாறுபட்டு சாதாரண மனிதர்களை போலவே கிருஷ்ணமூர்த்தி மாறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை தனது தொண்டு நிறுவனத்தில் வைத்துக்கொண்டார். கிருஷ்ணமூர்த்தி இறந்தவர்களுக்கு சடங்கு செய்பவராக வேலை செய்து வந்துள்ளார். இதனால் ஊர்க்காரகள் பிணத்திற்கு சங்கு ஊதுபவர் எனக்கூறி இவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.

பெற்றோரின் மறைவுக்கு பின்னர் உறவினர்கள் கைவிட்ட காரணத்தால் தனிமை மட்டுமே இவருக்கு உறுதுணையாக இருந்தது, பிச்சை எடுத்து சாப்பிட மனமில்லாமல் குப்பை தொட்டியில் கிடப்பதை எடுத்து சாப்பிட்டு வளர்ந்து வந்தார். காலப்போக்கில் மனம்நலம் பாதிக்கப்பட்டு பித்துப்பிடித்துப்போனவர் போல மாறியுள்ளார்.

இந்நிலையில் தான் மகேந்திரன் இவரை தன்னுடன் இணைத்துக்கொண்டார். தனக்கு உணவு கொடுக்காத மக்களுக்கு தற்போது தனது கைகளாலேயே உணவு பரிமாறுகிறார் கிருஷ்ணமூர்த்தி.