59 வயதில் பல பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றிய நபர் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்!!

393

59 வயதில் பல பெண்களுக்கு திருமண ஆசை காட்டி நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முருகன் என்ற இந்த நபர் செல்போன் எண்ணின் மூலம் சிக்கியுள்ளார். சென்னை தாம்பரம் பொலிஸ் நிலையத்தில் ஒசூர சேர்ந்த பெண் ஒருவர், தன்னை ஒரு நபர் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டதாக கண்ணீர் மல்க புகார் அளித்து, ஒரு போன் நம்பரையும் பொலிசாரிடம் அளித்துள்ளார்.

ஆனால், அந்த போன் நம்பரை பொலிசார் தொடர்புகொண்டபோது, அது சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தாம்பரம் காவல் சரகத்தில் இதே மாதிரியான மேலும் இரண்டு புகார்கள் பொலிசாருக்கு வந்தன. இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து முருகன் கைது செய்யப்பட்டார்.

இரண்டவதாக திருமணம் செய்வதாகக்கூறி விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தில் எம்மதமும் சம்மதம், மாதச்சம்பளம் 50,000 ரூபாய் என்று குறிப்பிட்டிருப்பதோடு செல்போன் நம்பர் ஒன்றும் இருக்கும். அந்த நம்பரில் தொடர்பு கொள்பவர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவார் முருகன். பிறகு நேரில் சந்திப்பதாகக் கூறுவார். அதை நம்பி வரும் பெண்ணிடம், தன்னைபற்றிய விவரங்களை தெரிவிப்பார்.

அதைக்கேட்கும் பெண்கள், முழுமையாக முருகனை நம்பிவிடுவார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் பெண்ணிடம் எல்லை மீற மாட்டார். நம்பிக்கை ஏற்படும்வரை பழகும் முருகன், அதன்பிறகே தன்னுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்குவார். நகை, பணத்தை திருமண ஆசையைக் காட்டி ஏமாற்றிவிட்டு அவர் பயன்படுத்திய சிம் கார்டையையும் தூக்கிப் போட்டுவிடுவார்.

முருகனுக்கு 59 வயதாகுகிறது. இதனால் அவரின் தலைமுடி வெள்ளையானதால் கறுப்பு ஹேர் டை அடித்து 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் போல மேக்அப் செய்துகொண்டு பெண்களை சந்திப்பார். முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

தனக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால் கீழே கிடந்த செல்போனின் மூலம் இப்படி மன்மதன் வேலையை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் கூறியதாவது, கைது செய்யப்பட்டுள்ள முருகனிடமிருந்து 18 சவரன் நகைகள், 30,000 ரூபாய், 40 சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

முருகனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கின்றன. ஆனால், மூன்று பெண்களைத் தவிர மற்றவர்கள் புகார் கொடுக்கவில்லை. தேவைப்பட்டால் அவரை காவலில் எடுத்து விசாரிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.