இருமுகியான அழகி : காதலனின் வெறிச்செயலின் பின் விளைவுகள்!!

327

தன்னை அவமானப்படுத்திய காதலியை அசிங்கமாக்க வேண்டும் என்பதற்காக அவளது அழகிய முகத்தில் ஆசிட் வீசினான் ஒரு காதலன். அவளோ தன்னை “இருமுகி” என அழைத்துக் கொண்டு அவனை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறாள்.

ஜேர்மனியின் Hannoverஐச் சேர்ந்த Vanessa Münstermann (29) ஒரு அழகுக் கலை நிபுணர். அவளது காதலனான Daniel F அவள் தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி அவளது முகத்தில் அமிலத்தை வீசினான்.

இதனால் அவளது ஒரு கண், ஒரு காது, மூக்கு பாதிக்கப்பட்டதோடு அவளது ஒரு பக்க முகம் கோரமானது. இதனால் தனது எதிர்காலமே பாழாகிப் போனதாகத் தெரிவித்த Vanessa, இனி தன்னால் ஒரு அழகுக் கலை நிபுணராக பணி புரிய இயலாது எனக் கூறி, 250,000 யூரோக்கள் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

Daniel Fக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு 250,000 யூரோக்கள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.

Daniel Fஇன் வீட்டார் தங்களால் அவ்வளவு பெரிய தொகையை வழங்க இயலாது என்றும் 100,000 யூரோக்கள் கொடுத்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்னும் யோசனையை முன் வைத்தனர். ஆனால் அந்த திட்டத்தை Vanessa ஏற்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் நேற்று ஜேர்மன் சிவில் நீதிமன்றம் நஷ்ட ஈடாக கேட்கப்பட்ட தொகை பெரியதுதான் என்றாலும் இவ்வளவு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திய கோர செயலுக்கு இந்த தண்டனை தகுந்ததுதான் என்று கூறிவிட்டது.

Vanessaவின் முகத்தில் வீசப்பட்ட அமிலத்தை அவர் ஒரு வேளை விழுங்கியிருந்தால் அவர் உயிரிழக்க நேரிட்டிருக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.