செயலிகள் மூலம் உங்களை கண்காணிக்கிறோம் : கூகுளின் ஒப்புதலால் அதிர்ச்சி!!

636


கூகுளின் செயலிகள் அடங்கிய ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் சேவை வசதியை அணைத்து வைத்தாலும், பயனாளர்களை தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



ஸ்மார்ட்போன்களில் அதிகளவில் கூகுளின் Operating System பயன்படுத்தப்படுகிறது. அதில் Google Map உள்ளிட்ட பல்வேறு செயலிகள், பயனாளர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருகிறது.

இவை அனைத்தும் Location Data/History எனும் சேவையின் வழியாக செயல்படுவதாகவும், இந்த சேவையை Off செய்து விட்டால் பயனாளர்கள் இருக்கும் இடம் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படாது என்றும் கூகுள் Help பக்கத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், இந்த சேவை வசதியை Off செய்தாலும் பயனாளர்களை தொடர்ந்து கண்காணிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக Location Data/History தொடர்பான விளக்கம் மாற்றப்பட்டுள்ளது.



இந்த விளக்கம் தற்போது கூகுள் Help பக்கத்தில், ‘இந்த சேவையில் செய்யப்படும் மாற்றமானது உங்கள் கைப்பேசியில் உள்ள Google Location Service மற்றும் Find My Phone உள்ளிட்ட இதர இருப்பிட தகவல் சேவைகளை பாதிக்காது. Google Maps மற்றும் தேடுதல் வசதிகளுக்காக, உங்கள் இருப்பிடம் தொடர்பான சில தகவல்கள் சேகரிக்கப்படலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கூகுளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘பயனாளர்களின் கூகுள் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தவும், கூகுள் உதவி தொடர்பாக கூடுதல் விளக்கமளிக்கவுமே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.