கேரள மக்களுக்காக 8 வயது தமிழக சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல் : ஹீரோ நிறுவனம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

278

சைக்கிள் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர் அப்படியே கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கே.கே.ரோடு சிவராம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவசண்முகநாதன்-லலிதா. இவர்களுக்கு அனுப்பிரியா(8) என்ற மகள் உள்ளார்.

அங்கிருக்கு தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இதற்காக அவர் பெற்றோரிடம் தினமும் வாங்கும் காசுகளை உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். இப்படி கடந்த 4 ஆண்டுகளாக சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கேரள மக்கள் வெள்ளத்தால், கடுமையான சிரமங்களை சந்தித்து வருவதை அறிந்த சிறுமி, தான் இத்தனை ஆண்டுகள் சேமித்து வைத்திருந்த, பணத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்குமாறு தனது தந்தையிடம் கொடுத்துள்ளார்.

சிறுமியின் தந்தையும், உண்டியலில் இருந்த பணம் 8 ஆயிரத்து 246 ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலை எடுத்து அனுப்பியுள்ளார்.

சிறுமியின் செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமின்றி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதை ஹீரோ சைக்கிள் நிறுவனம் சிறுமியின் நல்ல உள்ளத்தை அவருக்கு புது சைக்கிள் ஒன்றில் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான, பன்கஜ் முன்ஜல் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புள்ள அனுப்ரியா, தக்க நேரத்தில் மனிதநேய ஆதரவுக் கரம் நீட்டிய உங்களது செயலை பாராட்டுகிறோம். எங்களது பிராண்ட்டின் புதிய சைக்கிள் உங்களுக்கு கிடைக்கும். தயது செய்து உங்களது முகவரியை எங்களது இ-மெயில்க்கு ([email protected]) அனுப்பி வையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.