ஏழரை ஆண்டுகள் மறைந்து வாழ்ந்த கனடியர் : புது முகம் கொடுத்த கனடா மருத்துவர்கள்!!

387


வேட்டையாடச் சென்ற ஒரு மனிதரின் முகம் விபத்தொன்றில் கோரமாக, ஏழரை ஆண்டுகளாக அவர் தனது அறையில் யார் முகத்திலும் படாமல் மறைந்தே வாழ்ந்த நிலையில், தனது பேத்தியுடன் மீண்டும் வாக்கிங் செல்ல வேண்டும் என்ற அவரது ஆசைக்காக 30 மணிநேரம் போராடி அவருக்கு ஒரு புதிய முகத்தை அளித்திருக்கிறார்கள் கனடா மருத்துவர்கள்.

வேட்டையாடச் சென்ற Maurice Desjardins வீடு திரும்பும் போது அவரது முகத்தில் மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் எதுவுமே இல்லை.



கோர விபத்தொன்றில் அவர் முகம் அகோரமாகிப்போனது. அன்று முதல் ஏழரை ஆண்டுகளாக யாரையும் சந்திக்காமல் தனது தனியறையிலேயேவலியிலும், அவமானத்திலும் குறுகிப்போய் வாழ்ந்து வந்தார் Maurice Desjardins. ஒரு நாள் Montrealஇல் உள்ள பிளாஸ்டிக் சர்ஜனான Daniel Borsukஐக் காண வந்தார் Maurice.

இரண்டு விடயங்கள் மருத்துவரிடம் கேட்டார் அவர், ஒன்று மூக்கு, உதடுகள், தாடை, பற்கள் ஆகியவை வேண்டும், இரண்டு, தனது பேத்தியுடன் மீண்டும் வாக்கிங் செல்லும்போது தன்னை யாரும் அருவருப்பாகப் பார்க்கக்கூடாது.



தனது நோயாளியை வருடக்கணக்காக ஆராய்ந்தார் Dr. Daniel. அவர் இந்த சிகிச்சையைத் தாங்குமளவிற்கு உடலளவிலும் மன ரீதியாகவும் வலிமையாகஇருக்கிறாரா என நீண்ட காலத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.



கடைசியாக 9 மருத்துவர்கள், பல வல்லுனர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், நர்ஸ்களும் இதர மருத்துவப் பணியாளர்களும் என பலர்இணைந்து Mauriceக்கு புதிய முகத்தை கொடுக்கும் 30 மணி நேர அறுவைசிகிச்சையில் இறங்கினார்கள்.


பெரிய மனம் கொண்ட ஒரு குடும்பம், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினரின் முகத்தை தானமாக கொடுக்க முன் வந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிசைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார் Maurice. அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடைசியாக Mauriceஇன் ஆசைகள் நிறைவேறி விட்டன, இனி அவர் விருப்பபடியே தனது பேத்தியுடன் வாக்கிங் செல்லலாம்.


இது கனடாவின் முதல் முக மாற்று அறுவை சிகிச்சை என்பதும், Mauriceதான் அதிக வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சையின்போது Mauriceஇன் வயது 64.