வவுனியாவில் வர்த்தகர்களுக்கு புதிய வரி விதிப்பு முறை தொடர்பான கருத்தரங்கு!!

319


வவுனியா வர்த்தக சங்கம், இலங்கை மத்திய வங்கி ஊடாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வவுனியா வர்த்தகர்களின் நன்மை கருதி ”புதிய வரி விதிப்பு முறை தொடர்பான அறிவூட்டல் கருத்தமர்வு” வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (18.09.2018) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலமையில் இடம்பெற்ற இக் கருத்தமர்வில் வளவாளர்களாக இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் பந்துள, உதவி ஆணையாளர்களான திருமதி தயாகரன், திரு சிவபாலன், இலங்கை மத்திய வங்கி முகாமையாளர் திருமதி ஜெயரூபி, வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், வவுனியா மாவட்ட கணக்காளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



முற்றுமுழுதாக தமிழ் மொழியில் இக் கருத்தரமர்வு இடம்பெற்றதுடன் வரி செலுத்துதல் தொடர்பான விளக்கங்கள் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது. வர்த்தர்களும் பல்வேறு வினாக்களை வளவாளர்களிடம் தொடுத்தனர்.

80க்கு மேற்பட்ட வர்த்தகர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.