இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான செய்தி!!

268


இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்ட பாரிய சரிவு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ரூபாவின் வீழ்ச்சி காரணமாக, வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அதிகளவு பணம் செலவாகும் என சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.



தற்போதைய நிலைமை காரணமாக, Suzuki Wagon R காரின் விலை சுமார் 200,000 ரூபா வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



Toyota Vitz வாகனத்தின் விலை 250,000 ரூபா வரை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.


ரூபாவின் பெறுமதி 0.7 வீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளமையினால் இந்த நிலை தொடர வாய்ப்புகள் உள்ளதாக சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.