ஜாதகத்தில் மொத்தம் நான்கே வகைதானாம் : இதில் நீங்கள் எந்த வகை என்று தெரிய வேண்டுமா?

705


ஜாதகம் என்பது இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேறு வுறு தான் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஜாதகங்களும் மொத்தமே நான்கு வகைகள் தான். அந்த நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றாகத் தான் நம் ஒவ்வொருவருடைய ஜாதகமும் இருக்கும். அதைப்பற்றி இங்கே பார்ப்போம்



தர்ம ஜாதகம்
ஒருவருடைய பிறப்பு வரைபடக் கட்டத்தில் 1 ஆம் எண் வீடு, 5 ஆம் எண் வீடு, 9 ஆம் எண் வீடு ஆகியவற்றை மிகச் சிறப்பாகக் கொண்ட ஜாதகமாக இருக்கும். இந்த ஜாதக அமைப்பில் பிறந்தவர்கள் தான் உலகில் மிகவும் பேரும் புகழும் கிடைக்கப் பெறுவார்கள். நிறைய தர்ம காரியங்கள் செய்வார்கள். கோவில் திருப்பணிகள் போன்றவற்றை மிக அதிகமாக செய்ய முயற்சி செய்வார்கள்.

பள்ளிக்கூடங்க்ள கட்டுதல் போன்ற பொது தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகமாக இருப்பார்கள். எப்போதும் சமூகம் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கியிருப்பார்கள். இந்த உலகை விட்டு பிரிந்த பின்பும், அவர்களுடைய புகழ் இந்த உலகில் இருக்கும். தர்ம ஜாதகத்தில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.



தன ஜாதகம்
இரண்டாவது வகையான தன ஜாதகத்தில் பிறந்தவர்களுடைய பிறப்பு வரைபடக் கூட்டத்தில், இரண்டாம் வீடு, ஆறாம் வீடும், பத்தாம் வீடும் மிகச் சிறப்பாக கொண்ட ஜாதகம் தான் தன ஜாதகம் உடையவர்கள். இந்த ஜாதக அமைப்பில் பிறந்தவர்கள் தான் வாழ்நாளில் மிக அதிகமாக பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்.



பணம் சேர்கின்ற ஆற்றல் இவர்களுக்கு நிகராக வேறு யாராலும் பணம் பற்றி புரிதல் உடையவராக இருக்காது. ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை தான் அனுபவிக்கவோ முடியாது. அல்லது அதற்கான எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாது.


காம ஜாதகம்
ஜாதகத்தில் மூன்றாவது வகையான ஜாதகக் கட்டத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய பிறப்பு வரைபட ஜாதக்க கட்டங்கள் மூன்றாம் எண் வீட்டிலும், ஏழாத் எண் வீட்டிலும் பதினோறாம் வீட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இத்தகைய அமைப்பு ஜாதகம் இருப்பவர்களைத் தான் காம ஜாதகம் என்று அழைப்பார்கள். இந்த ஜாதகத்தில் பிறந்தவன் தான் பணம் இருக்கிறதோ இல்லையோ என எதைப்பற்றியும் கவலைப்படாத, உலகத்தில் அனுபவிப்பதற்காகவே பிறந்தவராக இருப்பார்கள்.

இந்த ஜாதகத்தில் பிறந்தவர்கள், தான் சம்பாதித்த பணமோ, தந்தையின் சொத்தோ, மனைவியின் வழியில் வந்த பணமோ, நண்பர்களுடைய பணமோ என எதையும் பார்க்காமல், தனக்கு என்ன தோன்றுகிறதோ அந்த மாதிரி மிக அலட்சியமாக செலவு செய்து முடிப்பவராக இருப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையில், சிற்றின்பங்கள், பேரின்பங்கள் என எல்லாவற்றையும் அனுபவித்துச் செல்லக்கூடியவராக இருப்பவர்கள் இந்த காம ஜாதகக்காரர்களாக இருப்பார்கள்.


ஞான ஜாதகம்
ஜாதகத்தில் கடைசியும் நான்காவதுமான வகைதான் இது. இந்த வகையான ஜாதகக் கட்டத்தில் பிறந்தவர்கள், தங்களுடைய பிறப்பு வரைபட ஜாதக்க கட்டத்தில், நான்காம் எண் வீட்டிலும், எட்டாம் எண் வீட்டிலும் பனிரெண்டாம் வீட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கும். இத்தகைய அமைப்பு ஜாதகம் இருப்பவர்களைத் தான் ஞான ஜாதகம் என்று அழைப்பார்கள்.

இந்த ஜாதகக் கட்டத்தில் மிகப் பிறந்தவர்கள் மிகவும் பாடாய் பட்டுவிடுவார்கள். அதாவது இந்த ஜாதகத்தில் விரய ஸ்தானம் மிகுதி. வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழந்து விட்டு, எல்லாவிதமான கஷ்டங்களையும் அனுபவிக்கச் செய்வார்கள். தன்னுடைய சொத்து மற்றும் பணத்தையல்லாம் பறிகொடுத்து விடுவார்கள் அல்லது யாரிடமாவது ஏமாந்து போய்விடுவார்கள்.

வாழ்க்கையில் எல்லா அடிகளும் பட்டு, வாழ்க்கையின் நடுப்பகுதியிலோ அல்லது வாழ்வின் இறுதியிலோ ஞானியாகி மாறி, இந்த உலகமே மாயம் என்று தத்துவங்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிடுவார்கள். இப்படி ஏதாவது ஒரு அமைப்புக்குள் தான் நாம் எல்லோருமே பிறந்திருப்போம்.