வவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்வு!!

496


வவுனியா, நெடுங்கேணி ஒலுமடு அ.த.க பாடசாலை ஒலுமடு  தமிழ் மகாவித்தியாலயம்   என்ற பெயரில் 1C பாடசாலையாக தரம்  உயர்த்தப்பட்டுள்ளது .

1976ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒலுமடு பாடசாலை, அப்பகுதி மக்களினால் வட மாகாண கல்வி அமைச்சுக்கு மகாவித்தியாலயமாக தரமுயர்த்துமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு அமைய மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.



இதேவேளை, அப்பாடசாலையில் உயர்தரவகுப்புகளும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கென்று அமைக்கப்பட்ட இரு கட்டிடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலையின் அதிபர் கு.விமலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் பிரதம அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், எம்.தியாகராசா, வவுனியா வடக்கு பிரதேசசபையின் உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



வவுனியா வடக்கு கல்வி வலயத்தினை சேர்ந்த ஆசிரியர் ம.பகீரதனின் நிகழ்ச்சித்தொகுப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் இருந்து பல்வேறு துறைகளிலும் பிரகாசித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.