பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பிச்சையெடுக்கும் குழந்தைகள் : நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!

568


இந்தோனேஷியாவில் நிலநடுக்க மற்றும் சுனாமியின் பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சாப்பிட்டிற்காக பிச்சை எடுப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்தோனேஷியாவின் Sulawesi பகுதியில் ஏற்பட்ட பயங்கர் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக 1763-பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.



அதுமட்டுமின்றி இந்த இயற்கை பேரழிவு காரணமாக சுமார் 160,000 வீடுகள் தரைமட்டமாகின, 66,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5000 பேர் காணமல் போயுள்ளதால், அவர்கள் இறந்துவிட்டார்களா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இந்தோனேஷியா மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் தங்கள் புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் போன்றவைகளை இழந்துள்ளன.



ஏராளமான பள்ளிக் கூடங்களும் சேதமடைந்துள்ளதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. அரசின் உதவி போதுமான அளவிற்கு மக்களுக்கு கிடைக்காததால், உணவிற்கு தவித்து வருகின்றனர்.



இதன் காரணமாக அங்கிருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், முக்கிய தேசிய சாலையில் நின்று கொண்டு உதவும் படி கேட்டு பிச்சை எடுத்து வருகின்றனர்.


இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், தங்களுக்கு உதவும் படி ஏராளமான குழந்தைகள் நகரின் முக்கிய சாலையில் பலகை ஒன்றை வைத்துக் கொண்டு, அந்த வழியே செல்லும் லாரி போன்ற வாகனங்களின் டிரைவர்களிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.

அதில் இருக்கும் ஒரு குழந்தையிடம் இது குறித்து கேட்ட போது, எங்கள் வீடு சுத்தமாக இல்லை, பொம்மைகளும் இல்லை. என்னால் வெளியில் விளையாடவும் முடியவில்லை, பள்ளிக்கும் செல்ல முடியவில்லை, மக்கள் உணவு மற்றும் பானங்கள் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்.


இது போன்ற பல குழந்தைகள் உதவி கேட்டு பலகை தங்கள் உடம்பில் வைத்துக் கொண்டும், பாத்திரத்தை நீட்டுவது தொடர்பான புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.