வவுனியாவில் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக வீதி நாடகம்!!

498


அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் தற்கொலைகளுக்கு எதிராக வவுனியாவில் நேற்றைய தினம் வீதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டுள்ளது.



சீட் நிறுவனத்தின் அனுசரணையில் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தொடர்பாக , பெற்றோர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் குறித்த வீதி நாடகம் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வவுனியா நகர மத்தியில் இந்த நாடகம் நடத்தப்படவுள்ளது.



தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம், இன்றைய பெரியவர்கள் நேற்றைய சிறுவர்கள் எனவே சிறுவர்களைப் பாதுகாப்பதும் அவர்களை முன்னோக்கிச் செயற்படவைப்பதும் நமது பொறுப்பு என எழுதப்பட்ட பதாதையுடன் விஷேட தேவைக்குட்பட்டவர்களின் பங்குபற்றலுடன் இந்த நாடகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.