வவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராய்வு!!

338

வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேசச் செயலாளர் க.பரந்தாமனின் நெறிப்படுத்தலின் கீழ் நெடுங்கேணி பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் தொடர்பிலும் இப்பகுதியில் பரவும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு தீர்வாக குடிநீரை சுகாதார பரிசீலனைக்கு உட்படுத்தி பயன்படுத்தல், விவசாயிகள் யானைகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக மின்சார வேலியமைத்தல், மற்றும் அமைச்சுக்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்க்கொள்ளப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் வவுனியா ஐ.தே.க.அமைப்பாளர் கருணாதாச, வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், பொலிஸார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.