வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திரைநீக்கம்!!

624

வவுனியாவில் திருவள்ளுவர் சிலை திரைநீக்கம் செய்யும் நிகழ்வும், தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளரை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று (17.10) இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணனால் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் துறைசார் ரீதியாக பதவி உயர்வு பெற்றுள்ளமையால் அவரை கௌரவிக்கும் முகமாக பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் மாலை அணிவத்து பொன்னாடை போர்த்தி பாண்டுவாத்தியங்கள் முழங்க பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரால் பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் மாணவர்கள் மனவிருப்பதுடன் ஆசிரியர்களின் பங்களிப்புடன் கல்விகற்றால் நிச்சயமாக அதிகூடிய பெறுபேறுகளை பெற முடியும். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் சரியாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.