மீண்டும் தாழமுக்கம் : இன்று முதல் இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம்!!

302

இலங்கைக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது தற்போது மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் மழையுடனான காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

தாழமுக்கமானது எதிர்வரும் 9 ஆம் திகதி தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் அந்தமான் தீவிற்கு அண்மையில் உருவாகும் சாத்தியமுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்த மழை பெய்து வருகின்றது.

இதனால் பல கிராமங்களிலுள்ள உள்வீதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளுர் போக்குவரத்துக்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

இவற்றைவிட அண்மைக்காலமாக மழையின்றி காய்ந்து வரண்டுபோய் கிடந்த சிறிய குழங்கள் மழை நீரில் நிரம்பியுள்ளதுடன், வாய்க்கால்கள், குட்டைகள், ஏரிகளும், நிரம்பிக்காணப்படுகின்றன.

இதேவேளை, இவ்வாறான சூழலில் பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.