நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிக்கு கிடையாது!!

336

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நான்கரை ஆண்டுகள் நிறைவடையும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர இதனை கூறியுள்ளார்.

சபாநாயகர் தலைமையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் 14 ஆம் திகதி நிச்சயமாக வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைக்க தயாராகி வருகின்றனர். அரசியலமைப்புச்சட்டத்தின் அமைய நாடாளுமன்றத்தை கலைக்கும் உரிய ஏற்பாடுகள் உள்ளன.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்ற போதிலும் 19 அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் மூலம் ஜனாதிபதிக்கு இருந்த அந்த அதிகாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.