மரண அறிவித்தல் : தாமேதரம்பிள்ளை மகேஸ்வரன்!!புங்குடுதீவு 9ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் அரசமுறிப்பு ஒமந்தையை நிரந்தர வசிப்பிடமாகவும் திருநாவற்குளம் வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தாமேதரம்பிள்ளை மகேஸ்வரன் (மலேப்பாம்பு) இன்று (09.12.2018) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மாவின் அன்பு மகனும் பரிமளத்தின் அன்புக்கணவரும் மங்களேஸ்வரி (ஆசிரியை நொச்சிமோட்டை கனிஸ்ட வித்தியாலயம்) அன்புத் தந்தையும்,

செல்வராசாவின் (செல்வம் காட்வெயார்) அன்பு மாமனாரும் குலமணி (கனடா) , பத்மநாதன் (கனடா) , பாலேந்திரன் பாலாம்பிகை (டென்மார்க்) , சுகிர்தமலர் , விக்கினேஸ்வரி , காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் , ஞானமூர்த்தி ஆகியவர்களின் அன்புச் சகோதரனும்,வேணுகோபால் (கனடா), கனகலட்சுமி (கனடா), மாணிக்கராசா, காலஞ்சென்ற சன்முகராசா, காலஞ்சென்ற பஞ்சலிங்கம், காலஞ்சென்ற குஞ்சிதபாதம், (கனடா), சந்திரவதனி, ஜெயகௌரி (ஆசிரியை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம்),


தேவராணி, ஜெகதாம்பிகை (ஆசிரியை மருதோடை அ.த.க பாடசாலை), கலைமதி (ஆசிரியை நொச்சிக்குளம் கனிஸ்ட வித்தியாலயம்), ரகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் கிதுர்ஸா (சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) அபிஷேக், நிலாசன் ( வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.12.2018 செவ்வாய்க்கிழமை 11மணியளவில் அன்னராது திருநாவற்குளம் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்.

பாலேந்திரன் : 0777567307

செல்வன் : 0776728220