மரண அறிவித்தல் : திருமதி இராசையா தவநாயகி!!

49


பிறப்பு : 05.03.1940 || இறப்பு : 14.12.2018


வவுனியா சின்னப்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வெளிக்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தவநாயகி அவர்கள் 14.12.2018 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா முதலி, பத்தினியம்மாள் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முள்ளியவளை கந்தையா, செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், இராசையாவின் பாசமிகு துணைவியாரும் ஆவார்.காலஞ் சென்றவர்களான தங்கவேலு முதலி, சந்தான லட்சுமி மற்றும் சிவநாயகி, குணநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் சத்தியபாமா, கெங்காதரன்(வருமான வரி பரிசோதகர்-வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை), கெங்கநாயகி (ஆசிரியை-வவுனியா பெரிய கோமரசன்குளம் ம.வி), பத்மலோஜினி(ஆசிரியை-சைவப்பிரகாச மகளிர் கல்லூரி), ஸ்ரீகாந்தன்(ஆசிரியர்-மூன்று முறிப்பு அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


துரைசிங்கம்(இளைப்பாறிய முகாமைத்துவ உதவியாளர்-தேர்தல் அலுவலகம்), பால குலேந்திர குமாரி (மருந்தாளர்-வவுனியா பொது வைத்தியசாலை), பூலோகசிங்கம் (அதிபர்-வவுனியா இந்துக் கல்லூரி), நவரட்ணம் (இளைப்பாறிய ஆசிரியர்- வவுனியா விபுலாநந்தா கல்லூரி), கௌரி (ஆசிரியை-வவுனியா இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிரோசன்(ஆசிரியர்-மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம்), நிரோசா(ஆசிரியை-மாதர்பனிக்கர் மகிழங்குளம் க.உ.வித்தியாலயம்),

ஹம்சாயினி(மருத்துவ பீட மாணவி-பங்களாதேஷ்), சாருஹாசினி (மின் இலத்திரனியல் இதய வரைபாளர்), நிவேதன்(விவசாய போதனாசிரியர்-முல்லைத்தீவு), ரிசோதன், சிபிஷா (மருத்துவ பீட மாணவி-யாழ் பல்கலைக்கழகம்), ஆரணி, இலக்கியா, இலக்சனா(மாணவிகள் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் வெளிக்குளம் இல்லத்தில் நடைபெற்று 16.12.2018 மாலை 3 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்