நீர்சுழற்சியில் உயிருக்கு போராடிய தாய்-மகன் : துணிச்சலாக செயல்பட்ட மூன்று இளைஞர்கள்!!

346

உயிருக்கு போராடிய தாய்-மகன்

கேரளாவில் நீர்சுழற்சியில் மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகன்களை மூன்று இளைஞர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. கேரளாவின் Pathanamthitta மாவட்டத்தின் Mallappally தாலுக்காவின் Kottangal பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா(32). இவருக்கு ஜிதின் என்ற 10 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 5 மணியளவில் திவ்யா மற்றும் ஜிதின் மணிமலா ஆற்றின் வழியே சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக ஜிதின் ஆற்றின் நீர்சுழற்சியில் மாட்டிக் கொண்டார். இதனால் அந்த சிறுவன் தப்பிப்பதற்கு போராடியுள்ளான்.

உடனடியாக இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா தன் மகனை காப்பாற்றும் எண்ணத்தில் அவரும் குதித்துவிட்டார். ஜித்தின் ஒருவழியாக அங்கிருந்த ஒரு மூங்கில் மரத்தின் கட்டையை கெட்டியாக பிடித்துள்ளார். ஆனால் மகனைக் காப்பாற்ற முயன்ற திவ்யா நீர்சுழற்சியின் காரணமாக உள்ளே மூழ்கினார்.

இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த இளைஞர்கள் மூன்று பேரும் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டுள்ளனர். நீர்சுழற்சியில் சிக்கியவர்களை மீட்பது மிகவும் ஆபத்தானது, காப்பாற்ற செல்பவர்களையும் அது இழுத்துவிடும், இருப்பினும் Olomana Madhusoodanan(42), அவரின் உறவினர் Ameer(25) மற்றும் உதயா(30) ஆகியோர் அவர்களை காப்பாற்றியுள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

மணிமலா ஆற்றை Olomana kayam என்றும் அழைப்பர். சுமார் 300 மீற்றர் நீளம் கொண்ட இந்த ஆறு, 18 அடி ஆழம் கொண்டது எனவும் இதில் அதிகளவில் பாறைகள் இருக்கும், இந்த ஆற்றின் நீர்சுழற்சியில் சிக்கினால், அவர்களின் நிலைமை அவ்வளவு தான் ஆனால் இவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.